தமிழ் மொழியின் தனிச்சிறப்புகளில் ஒன்று, அதன் ஆழமான இலக்கணமும், சொற்களின் வளமையும். ஒவ்வொரு சொல்லுக்கும் பல அர்த்தங்கள் உண்டு. அதே போல, சில நேரங்களில் ஒரே ஒரு எழுத்து கூட தனித்து நின்று ஒரு முழுமையான பொருளைத் தரும் ஆற்றல் கொண்டது. இதுவே “ஓரெழுத்து ஒரு மொழி” எனப்படும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு, குறிப்பாக TNPSC Group 1, Group 2, Group 4, VAO, Group 3 மற்றும் Group 5A தேர்வர்கள் தமிழ் இலக்கணத்தில் சிறந்து விளங்க இந்த பகுதி மிகவும் முக்கியமானது. ஒரே எழுத்து கொண்டு பல பொருள்கள் தரும் இந்த சொற்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?
ஓரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது.
அதாவது, ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால், அதற்கு “ஓரெழுத்து ஒரு மொழி” என்று பெயர்.
எடுத்துக்காட்டாக, “தீ” என்பது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் “நெருப்பு” என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் பயன்படுகிறது. எனவே “தீ” என்பது ஓரெழுத்து ஒருமொழி ஆகும். தமிழ் மொழியின் இந்த தனித்துவமான அம்சம், அதன் செழுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.
நன்னூலில் கூறப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒருமொழிகள்
தமிழ் இலக்கண அறிஞரான பவணந்தி முனிவர் தாம் எழுதிய புகழ் பெற்ற நன்னூல் என்னும் இலக்கண நூலில், தமிழில் மொத்தம் நாற்பத்திரண்டு (42) ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த 42 சொற்களும் இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- உயிர் எழுத்து ஓரெழுத்து ஒருமொழிகள்: 6 எழுத்துக்கள் (ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ)
- மெய்யெழுத்து சார்ந்த ஓரெழுத்து ஒருமொழிகள்: 36 எழுத்துக்கள் (க, ச, த, ந, ப, ம, ய, வ ஆகிய எட்டு வரிசைகளில் உள்ளவை)
இந்த 42 ஓரெழுத்து ஒருமொழிகளும் அவற்றின் முதன்மையான பொருள்களும் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:
நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு (42) ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓரெழுத்து ஒரு மொழிகளும் அவற்றின் பொருளும்
வ.எண் | எழுத்து | பொருள் |
---|---|---|
1. | ஆ | பசு |
2. | ஈ | கொடு |
3. | ஊ | இறைச்சி |
4. | ஏ | அம்பு |
5. | ஐ | தலைவன் |
6. | ஓ | மதகுநீர் தாங்கும் பலகை |
7. | கா | சோலை |
8. | கூ | பூமி |
9. | கை | ஒழுக்கம் |
10. | கோ | அரசன் |
11. | சா | இறந்துபோ |
12. | சீ | இகழ்ச்சி |
13. | சே | உயர்வு |
14. | சோ | மதில் |
15. | தா | கொடு |
16. | தீ | நெருப்பு |
17. | தூ | தூய்மை |
18. | தே | கடவுள் |
19. | தை | தைத்தல் |
20. | நா | நாவு |
21. | நீ | முன்னிலை ஒருமை |
வ.எண் | எழுத்து | பொருள் |
---|---|---|
22. | நே | இறந்துபோ |
23. | நை | இகழ்ச்சி |
24. | நோ | உயர்வு |
25. | பா | மதில் |
26. | பூ | கொடு |
27. | பே | நெருப்பு |
28. | பை | தூய்மை |
29. | போ | கடவுள் |
30. | மா | தைத்தல் |
31. | மீ | நாவு |
32. | மூ | மூப்பு |
33. | மே | அன்பு |
34. | மை | அஞ்சனம் |
35. | மோ | மோத்தல் |
36. | யா | அகலம் |
37. | வா | அழைத்தல் |
38. | வீ | மலர் |
39. | வை | புல் |
40. | வௌ | கவர் |
41. | நொ | நோய் |
42. | து | உண் |
ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் – மாணவர்களுக்கான கூடுதல் குறிப்பு:
சில ஓரெழுத்து ஒருமொழிகளுக்குப் பல பொருள்கள் உள்ளன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது இந்தப் பன்முகப் பொருள்களையும் அறிந்துகொள்வது அவசியம்.
- அ – எட்டு, அழகு, சிவன், விஷ்ணு, பிரம்மா, அந்த (சுட்டுப்பெயர்), அசை, திப்பிலி, 8 என்ற எண் வடிவம், சேய்மை
- ஆ – பசு, உயிர், ஆன்மா, வியப்பு, இரக்கம், துன்பம், நினைவு, ஆச்சாமரம், வினா, விடை, சொல், ஒர் இனம், வரை, உடன்பாடு, மறுப்பு, உருக்கம், இணைப்பு, இச்சை
- இ – இந்த (சுட்டுப்பெயர்), அரை (இரண்டில் ஒரு பங்கு, இங்கே, இவன், அன்பு, விகுதி, இகழ்ச்சி
- ஈ – அம்பு, குகை, கடவுள், உயிரி, இலட்சுமி, வண்டு, பாம்பு, கொடு, பறக்கும் பூச்சி, தேனி, கொக்கு, நரி, தாமரை, இதழ், திருமகள், நாமகள்
- உ – சிவன், ஆச்சரியம், இரண்டு, உந்த (சுட்டுப்பெயர்), உமையவள், ஒர் இடைச்சொல், உருக்கம்
- ஊ – உணவு, திங்கள், சிவன், இறைச்சி, தசை, ஊன், உண்ணல், சந்திரன்
- எ – ஏழு (என்பதின் தமிழ் வடிவம்), வினா எழுத்து, குறி
- ஏ – அம்பு, திருமால், சிவன், ஏவுதல், உயர்ச்சி மிகுதி, இறுமாப்பு, செலுத்துதல், மேல்நோக்குதல், வினா
- ஐ – அழகு, அரசன், தலைவன், கடவுள், குரு சிவன், பருந்து, நுட்பம், உயர்வு, உரிமை, ஐந்து, வியப்பு, பாஷனம், மென்மை, மேன்மை, மருந்து, தந்தை, பெருநோய், ஆசை, கிழங்கு
- ஒ – சென்று தங்குதல், மதகு நீர் தங்கும் பலகை, உயர்வு, இழிவு, கழிவு, இரக்கம், மகிழ்ச்சி, வியப்பு, நினைவு, அழைத்தல், ஐயம், நான்முகம், வினா பரிநிலை, நான்முகன், கொன்றை, ஆபத்து
- ஓள – பூமி, கடித்தல், ஆனந்தம், பாம்பு, நிலம், விழித்தல், அழைத்தல், வியப்பு, தடை
- க – அரசன், கதிரவன், திருமால், தீ, வியங்கோள் விகுதி, ஒன்று, நான்முகன், செல்வன், தொனி, நமன், மயில், மனம், மணி, இமயம், திங்கள், உடல், நலம், தலை, திரவியம், நீர், பறவை, ஒளி, முகில், வில்லவன், பொருத்து, வியங்குகோள் விகுதி,
- கா – சோலை, காத்திடு, காவடி, பூந்தோட்டம், பூங்காவனம், காவடித்தண்டு, பூ, கலைமகள், நிறை, காவல், செய், வருத்தம், பாதுகாப்பு, வலி, துலாக்கோல்
- கி – இரைச்சல் ஒலி
- கீ – கிளிக்குரல், தடை, தொளி, நிந்தை, பாவபூமி
- கு – பூமி, குற்றம், சிறுமை, இகழ்ச்சி, நீக்கு, நிறம், குவளயம்
- கூ – பூமி, கூவு, அழுக்கு, மலம், கூப்பிடு
- கை – கரம், சங்கு, ஒழுக்கம்
- கோ – அரசன், எருது, பசு, தலைமை, தந்தை, இறைவன்
- கௌ – தீங்கு, மனத்தாங்கல், கொள்ளு, தானியம், கௌவு என்று ஏவுதல்
- சா – இற, காய்ந்து போ, சோர்வு, சாக்காடு, மரணம், பேய், சாதல்
- சீ – அடக்கம், அலட்சியம், இகழ்ச்சி, இலக்குமி, வெறுப்புச் சொல், ஒளி, விந்து, கீழ், சளி, சீதேவி, செல்வம், வெறுப்பு, உறக்கம், பார்வதி, பெண்
- சு – விரட்டுதல், சுகம், மங்கலம், அதட்டு, ஒசை, நன்மை
- சூ – வானவகை
- சை – கைப்பொருள், செல்வம்
- சே – எருது, அழிஞ்சில் மரம், உயர்வு, எதிர்மறை, ஒலிக்குறிப்பு, சிவப்பு, காளை, செங்கோட்டை, சேரான், இடபம்
- சோ – மதில், அரண், உமை, வானாசுரண், நகர், வியப்புச்சொல், உமையாள், ஒலி
- ஞா – சுட்டு, பொருந்து
- த – குபேரன், நான்முகன்
- தா – கொடு, அழிவு, குற்றம், கேடு, கொடியன், தாண்டுதல், பகை, நான்முகம், வலி, வருத்தம், வியாழன், நாசம், வலிமை, குறை, பரப்பு, தருக, தாவுதல்
- தீ – நெருப்பு, அறிவு, இனிமை, தீமை, உபாயவழி, நரகம், சினம், நஞ்சு, ஞானம், கொடுமை, ஒளி, விளக்கு
- து – அசைத்தல், அனுபவம், எரித்தல், கெடுத்தல், சேர்மானம், நடத்தல், நிறைத்தல், பிரிவு, வருத்தல், வளர்தல்
- தூ – சீ, துத்தம், தூய்மை, வெண்மை, தசை, வலிமை, வகை, பற்றுக்கொடு, புள்ளிறகு, பகை, பறவை, இறகு
- தே – தெய்வம், மாடு, அருள், கொள்கை, நாயகன், கடவுள்
- தை – மாதம், பூச நாள், மகரராசி, அலங்காரம், மரக்கன்று, ஒரு திங்கள், கூத்தோசை, தைத்தல்
- நா – அயலாள், சுவாலை, திறப்பு, மணி, நாக்கு, வளைவு, பூட்டின் தூழ், நான்கு, சொல், ஊதுவாய்
- ந – சிறப்பு, மிகுதி, இன்பம்
- நெள – மரக்கலம், நாவாய், படகு, தெப்பம்
- நீ – முன்னிலை, ஒருமை, நீண்ட, நீலம்.
- நு – தியானம், நேசம், உபசர்க்கம், தோனி, நிந்தை, புகழ், ஐயம், நேரம்
- நூ – எல், அணிகலன், யானை, ஆபரணம், நூபுரம்
- நெ – கனிதல், நெகிழ்தல், வளர்தல், கெடுதல், மெலிதல், பிளத்தல், இளகல்
- நே – அன்பு, அருள், நேயம், அம்பு, நட்பு, உழை
- நொ – துன்பம், நோய், வருத்தம், வளி, மென்மை
- நோ – நோய், இன்மை, சிதைவு, துக்கம், பலவீனம், இன்பம்
- நை – வருந்து, இரக்கம் கொள், சுருங்கு, நைதல்
- ப – காற்று, சாபம், பெருங்காற்று, குடித்தல்
- பா – அழகு, நிழல், பரப்பு, பாட்டு, தாய்மை, காப்பு, கைம்மரம், பாம்பு, பஞ்சு, நுல், பாவு, தேர்தட்டு, பரவுதல்
- பி – அழகு
- பீ – பெருமரம், மலம், அச்சம்
- பூ – அழகு, இடம், இருக்குதல், இலை, ஒமக்கினி, ஒரு நாகம், கூர்மை, தாமரை, தீப்பொறி, பிறப்பு, பூமி, பொழிவு, மலர், நிறம், புகர், மென்மை, பூத்தல், பொலிவு
- பே – நுரை, மேகம், அச்சம், இல்லை, பேய், சினம்
- பை – கைப்பை, பசுமை, அழகு, குடர், சாக்கு, நிறம், பாம்பின் படம், மந்தகுணம், மெத்தனம், இளமை, உடல், வில், கொள்ளளவு, உள்ளுறுப்பு, சட்டப்பை, கொள்கலன்
- போ – ஏவல், போவென், பறந்திடு, செல்
- ம – இமயன், மந்திரம், காலம், சந்திரன், சிவன், நஞ்சு, நேரம், அசோகமரம், எமன், பிரம்மன்
- மா – அசைச்சொல், அழகு, அழைத்தல், அளவு, அறிவு, ஆணி, இடை, ஒரு மரம், கட்டு, கறுப்பு, குதிரை, பன்றி, யானை, சரஸ்வதி, சீலை, செல்வம், தாய், துகள், நஞ்சுக்கொடி, நிறம், பரி, பெருமை, மகத்துவம், மரணம், மிகுதி, மேன்மை, வண்டு, வயல், வலி, வெறுப்பு, பெரிய, தாய், செல்வம்
- மீ – ஆகாயம், உயர்ச்சி, மேலிடம், மகிமை, மேலே, வான், மேன்மை, பெருமை
- மூ – மூப்பு, மூனீறு, மூவேந்தர், அழிவுறு
- மே – மேம்பாடு, அன்பு, விருப்பம், மேன்மை
- மை – கண்மை, குற்றம், இருள், எழு, கருப்பு, செம்மறி ஆடு, நீர், மலடி, மேகம், தீவினை, மதி, மந்திரமை, வண்டினம், கலங்கம், பசுமை, பாவம், அழுக்கு, இளமை, களங்கம், அஞ்சனம்
- மோ – மோத்தல், மோதல், முகர்தல்
- யா – ஐயம், இல்லை, யாவை, கட்டுதல், அகலம், ஒருவகை மரம், சந்தேகம்
- வா – வருக, வாய், தாவுதல்
- வி – நிச்சயம், வித்தியாசம், பிரிவு, கொள்திரம், உபசர்க்கம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை, அழகு, விசை, விசும்பு, அறிவு
- வீ – மலர், சாவு, கொள்ளுதல், நீக்கம், பறவை, மோதல், விரும்புதல், மகரந்தம், கரு பிரித்தல், பூ, மரணம், மகரந்தம், சோர்வு
- வே – வேவு, ஒற்று
- வ – நான்கில் ஒரு பங்கு
- வை – கூர்மை, புல், வைக்கோல், வையகம், வைதல், சபித்தல், கொடு
- வெள – வெளவுதல், கெளவுதல், பற்றுதல்
TNPSC Group – 1, Group – 2, Group -4, and VAO போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் தேர்வாளர்கள் இந்தக் கோப்பைப் பதிவிறக்கம் செய்து பயிற்சி மேற்கொள்ளலாம். தமிழ் இலக்கணம் – ஒரெழுத்து ஒரு மொழி – PDF இணைப்பு.
TNPSC தேர்வுகளில் ஓரெழுத்து ஒரு மொழி முக்கியத்துவம்
TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNPSC Group 5A போன்ற போட்டித் தேர்வுகளின் பொதுத் தமிழ் பாடத்திட்டத்தில் ஒரெழுத்து ஒரு மொழிப் பகுதி முக்கிய இடம் வகிக்கிறது. இதில் இருந்து நேரடியாக வினாக்கள் கேட்கப்பட்டு, உங்களின் மொழி அறிவை சோதிக்கப்படுகிறது. இந்தப் பகுதியை நன்கு படித்தால், எளிதாக மதிப்பெண்களைப் பெற்று தேர்வில் வெற்றிபெற இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.
TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட ஒரெழுத்து ஒரு மொழி கேள்விகள்
முந்தைய TNPSC தேர்வுகளில் இப் பகுதியில் இருந்து கேட்கப்பட்ட சில மாதிரி வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இவை வினாக்கள் எவ்வாறு கேட்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
1. ‘ஏ’ என்ற ஒரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2019)
(A) தலைவன்
(B) நெருப்பு
(C) அரண்
(D) அம்பு
விடை: (D) அம்பு
2. மா” ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்?
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2019)
(A) பெரிய
(B) இருள்
(C) வானம்
(D) அழகு
விடை: (A) பெரிய
3. சோ- ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2022)
(A) அரசன்
(B) வறுமை
(C) மதில்
(D) நோய்
விடை: (D) மதில்
4. ‘மா’-என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2022)
(A) பெரிய
(B) சிறிய
(C) குறைய
(D) நிரம்ப
விடை: (A) பெரிய
5. ‘ஐ’- எனும் ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்.
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2024)
(A) அரசன்
(B) வீரன்
(C) ஓற்றன்
(D) தலைவன்
விடை: (D) தலைவன்
6. பட்டியல் 1 ஐ பட்டியல் 1-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2012)
பட்டியல் I | பட்டியல் II | ||
1. | பை | அ | நுரை |
2. | பூ | ஆ. | அளவு |
3. | பே | இ. | கூர்மை |
4. | மா | ஈ. | பாம்பின் படம் |
1 | 2 | 3 | 4 | |
(A) | ஈ | இ | அ | ஆ |
(B) | ஆ | அ | ஈ | இ |
(C) | இ | ஈ | ஆ | அ |
(D) | ஆ | இ | அ | ஈ |
விடை: (A)
1. பை – பாம்பின் படம்
2. பூ – கூர்மை
3. பே – நுரை
4. மா – அளவு
7. பட்டியல் 1 ஐ பட்டியல் 1-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக்
கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2012)
பட்டியல் I | பட்டியல் II | ||
1. | ஆ | அ | அம்பு |
2. | ஏ | ஆ. | இரக்கம் |
3. | ஐ | இ. | பசு |
4. | ஓ | ஈ. | அழகு |
1 | 2 | 3 | 4 | |
(A) | இ | அ | ஈ | ஆ |
(B) | அ | இ | ஆ | ஈ |
(C) | இ | ஆ | ஈ | அ |
(D) | ஈ | இ | அ | ஆ |
விடை: (A)
1. ஆ – பசு
2. ஏ – அம்பு
3. ஐ – அழகு
4. ஓ – இரக்கம்
8. ‘உ’ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2011)
(A) மகிழ்ச்சி
(B) கோபம்
(C) துன்பம்
(D) சிரிப்பு
விடை: (C) துன்பம்
9. ‘கா’ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2011)
(A) சோலை
(B) மாலை
(C) ஒலை
(D) வேலை
விடை: (A) சோலை
10. ‘ஈ’ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2011)
(A) எடுத்தல்
(B) கொடுத்தல்
(C) பார்த்தல்
(D) செய்தல்
விடை: (B) கொடுத்தல்
11. ‘ஓள‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2011)
(A) விண்
(B) பாதாளம்
(C) சுவர்க்கம்
(D) பூமி
விடை: (D) பூமி
12. ‘கீ‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 4 – பொதுத் தமிழ் – 2011)
(A) சேவல் கூவுதல்
(B) குயில் கூவுதல்
(C) கிளிக்குரல்
(D) மயில் அகவுதல்
விடை: (C) கிளிக்குரல்
13. ‘வி‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 1B – பொதுத் தமிழ் – 2011)
(A) மூக்கு
(B) காது
(C) தலை
(D) கண்
விடை: (D) கண்
14. ‘சீ‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 1B – பொதுத் தமிழ் – 2011)
(A) அடக்கம்
(B) ஒடுக்கம்
(C) நடத்தை
(D) முனிவு
விடை: (A) அடக்கம்
15. ‘தோ‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 1B – பொதுத் தமிழ் – 2011)
(A) பறவையின் ஒலி
(B) வானொலி
(C) விலங்கின் ஒலி
(D) வெளிச்சம்.
விடை: (C) விலங்கின் ஒலி
16. ‘வீ‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 1B – பொதுத் தமிழ் – 2011)
(A) குரங்கு
(B) மான்
(C) புழு
(D) பறவை
விடை: (D) பறவை
17. ‘ஐ‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC Group 1B – பொதுத் தமிழ் – 2011)
(A) கண்
(B) தலைவன்
(C) அடியார்
(D) தலைவி
விடை: (B) தலைவன்
18. ‘பூ‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC VAO Exam – பொதுத் தமிழ் – 2011)
(A) நிலவு
(B) வானம்
(C) உலகம்
(D) நீர்
விடை: (C) உலகம்
19. ‘ஏ‘ என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC VAO Exam – பொதுத் தமிழ் – 2011)
(A) வில்
(B) வேல்
(C) கேடயம்
(D) அம்பு
விடை: (D) அம்பு
20. ‘ஞா‘என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC VAO Exam – பொதுத் தமிழ் – 2011)
(A) பொருந்து
(B) மருந்து
(C) விருந்து
(D) நடந்து
விடை: (A) பொருந்து
21. ‘பா‘என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC VAO Exam – பொதுத் தமிழ் – 2011)
(A) பாடல்
(B) ஆடல்
(C) நாடல்
(D) தேடல்
விடை: (A) பாடல்
22. ‘ம‘என்னும் ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது ?
(TNPSC VAO Exam – பொதுத் தமிழ் – 2011)
(A) இந்திரன்
(B) பீமன்
(C) இயமன்
(D) நகுலன்
விடை: (C) இயமன்
ஓரெழுத்து ஒருமொழி – TNPSC தேர்வுக்கான தயாரிப்பு குறிப்புகள்
TNPSC போட்டித் தேர்வுகளில் தமிழ் இலக்கணத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற, ‘ஓரெழுத்து ஒருமொழி’ப் பகுதியை திறம்படத் தயார் செய்வது அவசியம். இதோ சில குறிப்புகள்:
- முழுமையான பட்டியல்: நன்னூலில் கூறப்பட்டுள்ள 42 ஓரெழுத்து ஒருமொழிகளையும், அவற்றின் முதன்மைப் பொருளையும் நன்கு படித்து மனப்பாடம் செய்யுங்கள். அட்டவணையை அடிக்கடி பார்த்து பயிற்சி செய்யலாம்.
- பன்மைப் பொருள்களைப் புரிந்து கொள்ளுங்கள்: சில எழுத்துக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உள்ளன (உதாரணமாக ‘மா’, ‘வீ’, ‘ஐ’). குறிப்பாக “மாணவர்களுக்கான கூடுதல் குறிப்பு” பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான பொருள்களையும் கவனமாகப் படித்து, சூழலுக்கேற்ப பொருளைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
- பழைய வினாக்களை பயிற்சி செய்யுங்கள்: முந்தைய TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட ‘ஓரெழுத்து ஒரு மொழி’ வினாக்களைப் பயிற்சி செய்வது மிக முக்கியம். இது வினாக்கள் எவ்வாறு கேட்கப்படுகின்றன என்பதையும், எந்தெந்த எழுத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதையும் புரிந்துகொள்ள உதவும். மேற்கண்ட மாதிரி வினாக்களைத் தாண்டி, முடிந்தவரை பல பழைய வினாத் தாள்களில் உள்ள கேள்விகளைப் பயிற்சி செய்யுங்கள்.
- வகை வாரியாகப் பிரிக்கலாம்: உயிர் எழுத்து ஓரெழுத்து ஒருமொழிகள் (6) மற்றும் மெய்யெழுத்து சார்ந்த ஓரெழுத்து ஒருமொழிகள் (36) எனப் பிரித்துப் படிப்பது நினைவில் வைத்துக்கொள்ள எளிதாக இருக்கும்.
- நினைவில் கொள்ள குறிப்புகள்: கடினமான எழுத்துக்களின் பொருளை நினைவில் வைக்க சிறு குறிப்புகள் (mnemonics) உருவாக்கலாம். அல்லது அட்டவணையை உங்கள் படிக்கும் அறையில் ஒட்டி அடிக்கடி பார்த்து பயிற்சி செய்யலாம்.
- தினசரி திருப்புதல்: தினமும் கொஞ்ச நேரம் இந்த 42 எழுத்துக்களையும் அவற்றின் பொருள்களையும் திருப்புதல் செய்வது படித்தவை நினைவில் பதிய உதவும். தேர்வு நெருங்கும் சமயங்களில் தினசரி திருப்புதல் மிகவும் அவசியம்.
- முழுமையான இலக்கணப் பயிற்சி: ஓரெழுத்து ஒருமொழி மட்டுமின்றி, தமிழ் இலக்கணத்தின் பிற பகுதிகளையும் முழுமையாகப் படிப்பது, மொழி அறிவை மேம்படுத்தி, இந்தப் பகுதியில் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் உதவும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
ஓரெழுத்து ஒரு மொழி என்றால் என்ன?
ஓரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது.
அதாவது, ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால், அதற்கு “ஓரெழுத்து ஒரு மொழி” என்று பெயர்.
எடுத்துக்காட்டாக, “தீ” என்பது வெறும் எழுத்தாக மட்டுமில்லாமல் “நெருப்பு” என்னும் பொருளைத் தரும் சொல்லாகவும் பயன்படுகிறது. எனவே “தீ” என்பது ஓரெழுத்து ஒருமொழி.தமிழில் எத்தனை ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன?
நன்னூல் இலக்கண நூலின்படி, தமிழில் நாற்பத்திரண்டு (42) ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன.
நன்னூல் அல்லாமல் வேறு இலக்கண நூல்களிலும் ஓரெழுத்து ஒருமொழி பற்றிக் கூறப்பட்டுள்ளதா?
பழைய இலக்கண நூல்களிலும் ஓரெழுத்து ஒருமொழி பற்றிக் குறிப்புகள் இருந்தாலும், பவணந்தி முனிவரின் நன்னூல் தெளிவாக 42 ஓரெழுத்து ஒருமொழிகளைப் பட்டியலிட்டுள்ளது.
ஓரெழுத்து ஒருமொழிகளை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
ஓரெழுத்து ஒருமொழிகளை உயிர் எழுத்து ஓரெழுத்து ஒருமொழிகள் (6) மற்றும் மெய்யெழுத்து சார்ந்த ஓரெழுத்து ஒருமொழிகள் (36) என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
அனைத்து ஓரெழுத்துக்களும் ஓரெழுத்து ஒருமொழிகளா?
இல்லை. உயிர் எழுத்துக்கள் (அ, இ, உ, எ, ஒ, ஔ) மற்றும் மெய் எழுத்துக்கள் (க், ங், ச்…) தனித்து நின்று பொருள் தராது. உயிர்மெய் எழுத்துக்களில் குறிப்பிட்ட சில எழுத்துக்கள் (கா, கூ, தை, மா போன்றவை) மட்டுமே ஓரெழுத்து ஒருமொழிகளாக வந்து பொருள் தரும்.
ஓரெழுத்து ஒருமொழிகள் TNPSC தேர்வுகளுக்கு ஏன் முக்கியம்?
இவை தமிழ் மொழியின் அடிப்படைச் சொற்களாகும். மொழி அறிவை சோதிக்கும் வகையில் இவற்றின் பொருள்களைத் தெரிந்துகொள்வது அவசியம். நேரடியாக மதிப்பெண்களைப் பெற உதவும் பகுதி இது.
ஓரெழுத்து ஒருமொழிகளின் பொருள்களை எப்படி நினைவில் வைத்துக்கொள்வது?
தினசரி திருப்புதல் செய்தல், அட்டவணையைப் பயன்படுத்திப் பயிற்சி செய்தல், பழைய வினாத்தாள்களில் வரும் கேள்விகளைப் பயிற்சி செய்தல் மற்றும் கடினமானவற்றுக்கு நினைவுக் குறிப்புகள் (mnemonics) உருவாக்குதல் மூலம் நினைவில் வைத்துக்கொள்ளலாம்.